தமிழ் நாடு விடுப்பு விதிகள்
1933ல் தமிழ்நாடு விடுப்பு விதிகள் தயாரிக்கப்பட்ட ‘4-9-1933 நடைமுறைக்கு வந்தது
அரசு ஊழியர் கீழ் குறித்த விடுப்புகளை அனுபவிக்க தகுதி உடையவர்
(1) ஈட்டிய விடுப்பு
2) சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு
3 மருத்துவச் சான்றிதழ் பேரில் ஈட்டா விடுப்பு
(4) மகப்பேறு விடுப்பு.
(5) உயர்கல்வி விடுப்பு
(6) மருத்துவமனை விடுப்பு
(7) சிறப்பு இயலாமை விடுப்பு
(8) அசாதாரண விடுப்பு
(9) அயல்நாட்டில் பணி புரிவதற்கான விடுப்பு
1 ஈட்டிய விடுப்பு தமிழ் நாடு விடுப்பு விதி எண் -8
ஈட்டிய விடுப்பு 01.07.1994 முதல் கணக்கிடப்படும் வழிமுறைகள்
உயர்பணி, தற்காலிக பணியாளர்கள் , தகுதிகாண் பருவம் மற்றும்அடிப்படைப்பணியில் 5 ஆண்டுகள் முறையான பணிமுடிக்கும் வரை
1. முன் வரவு தகுதியில்லை
2. இரண்டு முழு நாட்காட்டி மாத பணிக்காலம் 2 1/2 நாட்கள்
3. அதிக அளவு இருப்பு 30 நாட்கள்
4. பின்னமாக வரும் நாட்காட்டி மாத நாட்களுக்கு ஈட்டிய விடுப்பு கணக்கிட தகுதியில்லை
5. தகுதிகாண் பருவகாலத்தில் விடூப்பு எடுத்தால் விடுப்பு காலத்திற்கு சமமான காலத்திற்கு தகுதிகாண் பருவ காலம் நீட்டிக்கப்படும்
6. ஈட்டிய விடுப்புடன் முன் இணைப்பு / பின் இணைப்பு விடுமுறை அனுமதி காலத்திற்கு சமமான காலத்திற்கு தகுதிகாண் பருவம் நீட்டிக்கப்படும்.
உயர்ப்பணி தகுதிகாண் பருவம் முடித்தவாகள் மற்றும் பருவத்தினர் முறையான பணியாளர்கள் அடிப்படைப்பணியில் 5 ஆண்டுகள் முறையான பணி முடித்த பின்னர்
1. ஜனவரி மற்றும் ஜாலை முதல் நாள் முன்வரவு 15 நாட்கள்
2 அதிக அளவு 240 நாட்கள்
3. 6 மாதகாலத்திற்கும் குறைவான பணிக்காலத்திற்கு ஒவ்வொரு முழு நாட்காட்டி மாதத்திற்கும் 2 1/2 நாட்கள் வீதம் முன் வரவு வைக்கப்படும்.
4 .பின்னமாக வரும் நாட்காட்டி மாதநாட்களுக்கு ஈட்டிய விடுப்பு கணக்கிடத் தகுதியில்லை.
5. 226 நாட்களும் அதற்கு மேலும் முன் இருப்பு உள்ள பணியாளாகளுக்கு முன் வரவு 15 நாட்கள். 226 +15 என தனியே காண்பிக்கப்படூம்.
குறிப்பிட்ட அரையாண்டில் எடுக்கப்பட்ட விடுப்பு முதலில் 15 நாட்கள் முன்வரவில் கழிக்கப்பட்டு அதன் மேலும் விடுப்பு இருப்பின் முன் இருப்பில் கழிக்கப்படும்.
6.ஜுன் 30 மற்றும் டிசம்பர் 31 அன்று இறுதி இருப்பு கணக்கிடப்பட்டு 240 நாட்களுக்கு வரையறுக்கப்படும்.
7. ஒரு நாட்காட்டி மாதத்தின் இடையில் தகுதிகாண் பருவம் முடித்தால் ஈட்டிய விடுப்பு கணக்கிட அந்த மாதத்தின் கடைசி நாள் வரை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
8.பின்னமாக வரும் நாட்கள் அருகாமைக்கான முழு நாளாக கருதப்படூம். [௮.௧.எண் 60695/95-1 ப.ம.நி.சீ.துறை நாள் 02.11.95]
9.5 ஆண்டுகள் பணி முடித்தவருக்கு விடுப்பு கணக்கு திருத்தி அமைக்கும் முறை [01.07.1994 ] முதல் கிடையாது.
அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் மாறுதலான நாளிலிருந்து 5 மாதங்களுக்குள் விண்ணப்பித்தால் 15 நாட்களுக்கு மிகையாகமல் ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்க்கலாம்
அவ்வாரு சேர்க்கபடும் போது அதிகபட்ச ஈட்டிய விடுப்பு 240 நாட்கள் மிகைப்படக்கூடாது
ஒரு அரசு பணியாளர் ஜனவரி முதல்/ஜுலை முதல் நாளில் 226 அல்லது அதற்குமேல் ஈட்டிய விடுப்பு பெற்றிருந்து அதே நாளில் முன் வரவும் அனுபவிக்காத பணியேற்பிடை காலமும் விடுபட்ட கணக்கில் சேர்க்க வேண்டி நேரிட்டால் முதலில் அனுபவிக்க பணியேற்பிடை காலத்தை சேர்த்து 240 நாட்களுக்கு மிகாமல் வரையறை செய்ய வேண்டும் பின்னர் முன் வரவை தனியாக காண்பிக்க வேண்டும்
குறிப்புகள்:
1.பின்னமாக வரும் விடுப்பு நாட்கள், அருகிலுள்ள நாளுக்குக கொண்டு வரப்பட வேண்டும்.
2.ஒரு அரையாண்டில் துய்க்கப்படும் மருத்துவ சான்றுடன் (௮) மருத்துவச் சான்றில்லாத அசாதாரண விடுப்புக் காலம், மற்றும் தகுதியில்லா பணிக்காலஙகள் தற்காலிக பணிநீக்கம் உட்பட 1/10 பங்குக்குச் சமமான நாட்கள் (அதிக அளவாக15 நாட்கள் அடுத்த அரையாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும் முன்வரவில் கழித்து கொள்ளவேண்டும்
தற்காலிகப் பணியாளர்கள் (௮) தகுதிகாண் பருவ காலத்தினரைப பொருத்தவரை அசாதாரண விடூப்புக் காலத்தில் 1/20 பங்குக்குச் சமமான நாட்கள் (அதிக அளவாக 8 நாட்கள்) வழங்கப்படும் விடுப்பில் கழித்துக் கொள்ளப்பட வேண்டும்.
3. ஈட்டிய விடுப்பு அல்லது ஈட்டா விடுப்பு (ஊதியமுள்ள மகப்பேறு விடுப்பு, [கருச்சிதைவு வி௫ப்பு, மருத்துவமனை விடுப்பு, மற்றும் சிறப்பு இயலாமை விடுப்பு போன்றவற்றை துய்த்தால் இந்தக் குறைப்பு தேவையில்லை.
4. ஒரு அரையாண்டின் துவக்கத்தில் முன்வரவாக ஈட்டிய விடுப்பு வழங்கிய பின்னர், உள்ள முழு விடுப்பையும் துய்த்த பின்னர் ஒரு அரசுப் பணியாளர் அந்த அரையாண்௫ முடியும் முன்னரே காலமாகிவிட்டால் அவர் அதிகமாகத் துய்த்த விடுப்புக்கான ஊதியத்தை அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கும் ஓய்வூதியபலன்களிலிருந்து பிடித்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முன் வரவுக்கு முன்னால் அரையாண்டில் முன்னிருப்பு எவவளவு நாட்கள் இருப்பினும் அதைக் குறைத்து விட்டு அவர் அதிகமாகத் துய்த்த விடுப்பு நாட்களை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி தகுதியுடையதாக்க வேண்டும்.
5. அரையாண்டின் துவக்கத்தில் முன்வரவாக வழங்கப்படும் விடுப்பை அவ்வரையாண்டின் துவக்கத்திலேயே துய்க்கவோ அல்லது ஒப்படைக்கவோ அனுமதிக்கலாம்.
6. ஈட்டிய விடுப்புடன் சேர்த்துப் பிற விடுப்புகள்] எடுக்கலாம்
7. ஒரு துறையில் பணிபுரியும் அரசு ஊழியர் துறைக்கு தேர்வாணையம் அல்லது நியமனங்கள் வாயிலாக பணி நியமனம் பெற்றார் பழைய அலுவலகத்தில் அவர் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பு போன்ற விடுப்புகளை புதிய அலுவலகத்திலும் முன் கொணரலாம் / அனுபவிக்கலாம். [ அ.வி.65 ல் துணை விதி (5) மற்றும் அ.ஆணை எண் 309 ப.ம.நி.சீ.துறை நாள் :02-07-90]
ஒப்படைப்பு விடுப்பு
• ஈட்டிய விடுப்பு கணக்கில் இருப்பிலிருந்து 24 மாத இடைவெளியில் 30 நாட்கள் மிகாமலும் 12 மாத இடைவெளியில் 15 நாட்கள் மிகாமலும் விடுப்பில் செல்லாமலேயே ஒப்படைப்பு செய்து பயன் பெறலாம்
• ஊதியமில்லா விடுப்பு, சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு மற்றும் தற்காலிக பணி நீக்கக் காலம் போன்றவை தவிர பிற காலங்களிலும் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்யலாம்.
• விடுப்பு ஒப்படைப்பு செய்கின்ற மாதத்தின் நாட்கள் எவ்வளவாக ‘இருந்த போதிலும் ஒப்படைப்பு விடுப்பு காலத்திற்கான விடுப்பு ஊதியம் 1/30 என்ற விகிதத்தில் கணக்கிடப்பட வேண்டும்.
• விடுப்பு ஓபடைக்கும் நாளுக்கு முன்னரோ (அ) பின்னரோ விடுப்பு விண்ணப்பம் கொடுக்கலாம். பின்னர் கொடுக்கப்படும் விண்ணப்பமாயின் விடுப்பு ஒப்படைக்கும் ஒரு மாதத்திற்குள் கொடுத்திருக்க வேண்டும் அயல் பணியில் உள்ளவருக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
• தற்காலிக பணியில் உள்ளவர் ஒரு வருடம் தொடர்ந்து பணி முடித்திருந்தால் மட்டுமே ஈட்டிய வி்டுப்பு ஒப்படைக்கலாம் -[அ.ஆணை எண் 1089 ப.ம.நி.சீ.துறை (அ.வி 2)நாள் -1.11.80]
• மாவட்ட அதிகாரிகளுக்கு துறை அலுவலர் ஒப்படைப்பு விடுவிக்கும் ஒப்புதல் வழங்கலாம் அரசு அனுப்பிய தேவையில்லை – [அ.ஆ.எண் 21 ப.ம.நி.சீ.துறை நாள் -7.1.82 ] • ஒப்படைப்பு விடுப்பு விண்ணப்பம் பெறப்பட்ட 45 நாட்களுக்குள் விடுப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் -[அ.ஆ.எண் 687ப.ம.நி.சீ.துறை நாள் -16.7.82 ]
• ஒப்படைப்பு ஊதியம்= ஊதியம் +தர ஊதியம் அகவிலைப்படி மற்றும் இதர படிகள்
• ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தில் வீட்டு வாடகைப்படி ,நகர படி மற்றும் மலைவாழ் படி வழங்கப்படும்- -[அ.ஆ.எண் 200.நி.துறை நாள் -1.4.81/ அ.ஆ.எண் 43நி.துறை நாள் -28.1.82 ]
• அரசு குடியிருப்பில் வாடகை உடன் இருக்கும் அரசு ஊழியர்கள் ஒப்படைப்பு விடுப்பு காலத்தில் வாடகை படி பெற தகுதி உண்டு [அ.ஆ.எண் 777/நி.துறை நாள் -7.09.83]
• அரசுக் குடியிருப்பில் வாடகை இல்லாத நேர்வுகளில் ஊழியர்கள் ஒப்படைப்பு விடுப்புக் காலத்தில் வாடகைப் படி பெறத் தகுதியில்லை. [௮.௧.339853 / 84 / 7 நிதித் துறை நாள் 18.6.84]
• ஒப்படைப்பு விடுப்புக் காலத்தில் மருத்துவப்படி கிடையாது. [௮.௧.34419/ படிகள் IT 89-2 (நீதித் துறை) நாள் 5.5.89.]
• ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தில் இடைக்கால நிவாரணம் கிடையாது. [அ.க.எண்.28968/ C. F. 94.1 (நிதித் துறை) நாள் 35.24.]
• தற்காலிகப் பணி நீக்கத்தில் ஒப்புவிப்பு விடூப்பிற்கு தகுதி கிடையாது. ஆனால் தற்காலிக பணி நீக்கக் காலம் பணிக் காலமாகக் கருதப்பட்டு அப்பணியாளா் மீண்டும் பணிக்கு அமாத்தப்பட்டால் தற்காலிகப் பணி நீக்கக் காலத்தில் தகுதி எய்திய ஒப்படைப்பு விடுப்பினை அந்த ஊழியருக்கு வழங்கப்படலாம். இதற்கான விண்ணப்பத்தை தற்காலிகப் பணி நீக்கக் காலம் பணிக் காலமாகக் கருதப்பட்டு ஆணைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். [அ.க.எண்.58745/82-1ப(ம)நி.சீ.துறை நாள் 29.5.82 மற்றும் ௮.௧க.எண். 16.216/83-1ப(ம) நி.சீ.துறை நாள் 18.4.83.]
• தற்காலிகப் பணி நீக்கக் காலம் ஊதியமில்லா விடுப்பாகக் கருதப்பட்டால் இச்சலுகை கிடைக்காது. [ ௮.௧.எண்..92580/82-3ப(ம) நி.சீ.துறை நாள் 18.1.63.]
• பணியிலிருந்து நீக்கப்பட்ட (அ) அகற்றப்பட்ட அரசு ஊழியா் நீதிமன்ற ஆணைகளின் பேரில் மீண்டும்பணியமா்வு செய்யப்பட்டால் பணி நீக்கக் காலத்தில் தகுதியெய்திய ஒப்புவிக்கும் விடு ப்பு வழங்கலாம். அதற்கான விண்ணப்பம் மீண்டும் பணியமர்வு ஆணைகள் பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் அளிக்க வேண்டும். [. ௮.௧.எண்.23186/அ.86-9ப(ம)நி.சீ.துறை நாள் 19.1.87.]
• தற்காலிகப் பணி நீக்கத்தில் இருப்பவருக்கு எவ்வகையான விடூப்பும் (ஒப்படைப்பு விடூப்பு உட்பட) வழங்கப்படக்கூடாது